2 டோஸ் தடுப்பூசி போடாதவங்க ரயிலில் பயணிக்க முடியாது – மாஸ்க் இல்லனா ரூ. 500 அபராதம்.. தென்னக ரயில்வே அறிவிப்பு!!

0

புறநகர் ரயிலில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசிகளை செலுத்தி இருக்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாமல் சுற்றினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில்வே அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. இந்த நேரத்தில் அனைத்து பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை புறநகர் மின்சார ரயில்கள் மட்டும் குறைந்தளவில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்ய, 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ் கட்டாயம் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, முகக்கவசம் அணியாமல் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சுற்றினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக புறநகர் ரயிலில் செல்பவர்கள் வருகிற 31-ஆம் தேதி வரை UTS செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது எனவும், இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகிற ஜனவரி 10ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளனர். தென்னக ரயில்வேயின் அறிவிப்பால் பயணிகள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here