நாடு முழுவதும் பாரம்பரிய தொழில் செய்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக “விஸ்வகர்மா திட்டம்” செயல்பட இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் பாரம்பரியமாக காலணி தைக்கும் தொழில் மேற்கொள்பவர்கள், முடி திருத்தும் தொழில் செய்பவர்கள், டெய்லர் உள்ளிட்ட 18 வகையான தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு, வட்டியில்லா கடனாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். இரண்டாவது தவணையாக ரூ.2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
நாளை மறுநாள் (செப்டம்பர் 17) முதல் செயல்பட உள்ள இத்திட்டம், குல கல்வியின் மறு வடிவம் என தி.மு.க.வினர் உள்ளிட்ட பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதையடுத்து இத்திட்டத்தின் மூலம் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்பதை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு மாநில குழுவை நியமித்து உள்ளது.