சுற்றுலா பயணிகளுக்கு ஜில் ஜில் அறிவிப்பு.., சுருளி அருவியில் இன்று முதல் குளிக்க அனுமதி!!

0
சுற்றுலா பயணிகளுக்கு ஜில் ஜில் அறிவிப்பு.., சுருளி அருவியில் இன்று முதல் குளிக்க அனுமதி!!
சுற்றுலா பயணிகளுக்கு ஜில் ஜில் அறிவிப்பு.., சுருளி அருவியில் இன்று முதல் குளிக்க அனுமதி!!

தமிழகத்தில் கோடை வெயிலை தணிக்கும் விதமாக மதுரை தேனி அருகே இருக்கும் சுருளி அருவியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி இருக்கையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சுருளி அருவி வனப்பகுதிக்குள் அரிசி கொம்பன் என்கிற யானை உட்புகுந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் அந்த யானை சுருளி அருவியை ஒட்டிய வனப்பகுதியான சண்முக நதி அணை பகுதியில் சுற்றிக்கொண்டே இருந்ததால் அருவியில் குளிப்பதற்கு தடை நீடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அரசி கொம்பன் யானை கடந்த ஜூன் 5ம் தேதி வனத்துறையினரால் வளைத்து பிடிக்கப்பட்டது.

பிரபல நடிக்கருடன் விவகாரத்து., வெளிநாட்டில் தன் மகன்களுடன் இருக்கும் சரிதாவின் புகைப்படம் வைரல்!!

இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இன்று முதல் சுருளி அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதித்துள்ளனர். இந்த சமயத்தில் பள்ளிக்கூடம் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகமாக காணப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here