முக்கிய சீரியலை பின்னுக்கு தள்ளி விட்ட இடத்தை பிடித்த ‘பாக்கியலட்சுமி’ – வைரலாகும் டாப் சீரியல் லிஸ்ட்!!

0

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களின் டாப் ரேட்டிங் லிஸ்ட் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பாக்கியலட்சுமி மீண்டும் விட்ட இடத்தை பிடித்துள்ளது.

டாப் சீரியல் லிஸ்ட்

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் பல புதிய சீரியல்களும் களமிறங்கியுள்ளது. இப்படி இருக்க விஜய் டிவியை பொறுத்தவரையில் எப்பொழுதுமே பாரதி கண்ணம்மா தான் முதல் இடம்.

ஆனால் இந்த இரண்டாவது இடம், மூன்றவது இடத்தில் தான் பல சீரியல்கள் மாறிக்கொண்டே இருக்கும். சில காலமாக கோபி வீட்டில் மாட்டி கொள்வாரா?? என்ற பதட்டத்துடன் பாக்கியலட்சுமி சீரியல் நகர்ந்து கொண்டிருக்க இரண்டாவது இடத்தை பிடித்து மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளியது.

அதன் பிறகு நாம் இருவர் நமக்கிருவர் சீரியலில் முத்தரசு கொலை வழக்கு சம்பவம் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருந்தது. அந்த சீரியல் பாக்கியலட்சுமியை பின்னுக்கு தள்ளியது.

இந்நிலையில் மீண்டும் பல போராட்டங்களுக்கு பிறகு இந்த வாரத்தில் மீண்டும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது பாக்கியலட்சுமி. இதனால் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here