மீண்டும் சாதனை படைத்த பாரதி கண்ணம்மா சீரியல் – என்ன பண்ணி இருக்காங்கனு பாருங்களே!!

0

மக்கள் மத்தியில் சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த மாதத்தில் முன்னிலையில் இருக்கும் சீரியல்களின் லிஸ்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

டாப் சீரியல்ஸ்

90ஸ் காலம் தொடங்கியதில் இருந்தே சீரியல்களுக்கு தனி மவுசு தான். சித்தி, மெட்டி ஒலி போன்ற சீரியல்கள் தற்போது வரை மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இல்லத்தரசிகள் முக்கியத்துவம் தருவது என்றால் அது சீரியலுக்கு தான். ஆனால் அந்த காலத்திற்கும் இந்த காலத்திற்கும் ஒரு சிறு மாற்றம் உள்ளது. அதாவது குடும்பம், அழுகை, மாமியார் மருமகள் சண்டை போன்றவை தான் முக்கியமாக அந்த காலத்தில் காட்டப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் தற்போது ரொமான்ஸ் சீன் மட்டும் தான் முக்கியமாக காட்டப்பட்டு வருகிறது. ஒரு ஜோடிக்கு திருமணம் ஆனதும் அவர்கள் நாளடைவில் புரிந்துகொண்டு எப்படி அன்யோன்யமாக இருக்கிறார்கள் என்பது தான் அனைத்து சீரியல்களின் முக்கிய கருவாக உள்ளது. தற்போது சீரியல்களுக்கு என்று தனி போட்டியே உள்ளது. அனைத்து சேனல்களும் பல சீரியல்களை களமிறக்கி வருகின்றனர்.

கார்த்தியின் “சுல்தான்” படம் எப்படி இருக்கு?? திரைவிமர்சனம்!!

தற்போது இணையத்தில் டாப் 5 இல் உள்ள சீரியல்கள் லிஸ்ட் வைரலாகி வருகிறது. எப்பொழுதும் போல பாரதி கண்ணம்மா தான் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பாக்கியலட்சுமி, ரோஜா சீரியல் உள்ளது. நான்காவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இடம்பெற்றுள்ளது. அதே போல ஐந்தாவது இடத்தில் பூவே உனக்காக சீரியல் இடப்பெற்றுள்ளது. இந்த லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here