உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் ப்ராண்டுகள் – முதலிடம் எந்த ப்ராண்ட் தெரியுமா..?

0

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்டேட் உடன் புதுப்புது ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வருகின்றன. வாடிக்கையாளர்களும் பழைய போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய மாடல்களுக்கு மாறி வருகின்றனர்.

இந்த வகையில் உலகம் முழுவதும் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் எண்ணிக்கையின் அடிப்படையில் கவுண்டர்பாயிண்ட்டின் மார்க்கெட் மானிட்டர் சேவையானது 2019ம் டாப் 10 ஸ்மார்ட்போன் ப்ராண்ட் லிஸ்ட்டை வெளியிட்டு உள்ளது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

10.டெக்னோ (Techno)

டெக்னோ நிறுவனம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு 21.5 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து உள்ளது. இது மொத்த மார்க்கெட்டில் 1% பங்கை தன்வசம் கொண்டு உள்ளது.

09. ரியல்மீ (Realme)

ஸ்மார்ட்போன் மார்கெட்டிற்கு புதிய ப்ராண்ட் ஆன ரியல்மீ சென்ற ஆண்டு மட்டும் 25.7 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்று 2% மார்க்கெட் பங்கை தன்வசம் கொண்டு உள்ளது. இது ஒரு சீன தொழில்நுட்ப நிறுவனமாகும்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

08. எல்ஜி (LG)

தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனமான எல்ஜி 2% மார்க்கெட் பங்குடன் சென்ற ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 29.2 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்று உள்ளது.

07. லெனோவா குழுமம் (Lenovo)

சீன நிறுவனமான லெனோவா மோட்டோ ப்ராண்டையும் தன்வசம் கொண்டு உள்ளது. இது 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் 39.6 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து மார்க்கெட்டில் 3% பங்கை தன்வசம் கொண்டு உள்ளது.

06. விவோ (Vivo)

பிபிகே (BBK) நிறுவனத்தின் பிராண்ட்களில் ஒன்றான விவோ சென்ற ஆண்டு மட்டும் 113.7 மில்லியன் யூனிட்கள் ஸ்மார்ட்போன்களை விற்றுத் தீர்த்து உள்ளது. மேலும் இது மார்க்கெட்டில் 8% பங்கை கொண்டு உள்ளது.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

05. ஓப்போ (Oppo)

ஓப்போ நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 119.8 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உலகம் முழுவதும் விற்று உள்ளது. இந்நிறுவனமும் பிபிகே (BBK) நிறுவனத்தின் பிராண்ட்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் 8% சந்தைப் பங்கையும் கொண்டு உள்ளது.

04. ஜியோமி (Xiaomi)

சீன தொழில்நுட்ப நிறுவனமான ஜியோமி நான்காவது இடத்தில் 8% சந்தைப் பங்குடன் உள்ளது. இது கடந்த ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 124.5 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து உள்ளது.

03. ஆப்பிள் (Apple)

ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு 196.2 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து உள்ளது. மேலும் இது மார்க்கெட்டில் 13% பங்கை தன்வசம் கொண்டு உள்ளது.

02. ஹுவாய் (Huwaei)

ஆச்சர்யம் அளிக்கும் வகையில் ஹுவாய் நிறுவனம் இந்த பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. 2019ம் ஆண்டு இந்நிறுவனம் உலகம் முழுவதும் 238.5 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து 16% மார்க்கெட் பங்களிப்புடன் உள்ளது.

01. சாம்சங் (Samsung)

தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் 2019ம் ஆண்டில் 296.1 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்று 20% சந்தைப் பங்களிப்புடன் உலகில் முதல் இடத்தில் உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here