
பொதுவாக ஒவ்வொரு மாதமும் அணுமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் பொழுது, பணியாளர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக மின்தடை செய்யப்படுவது வழக்கம். திருப்பூர் அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், அவிநாசி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை சனிக்கிழமை அன்று மின் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் பழங்கரை, நம்பியம்பாளையம், வேலாயுதம்பாளையம், சின்னேரிபாளையம், செம்பியநல்லூர்.
Enewz Tamil WhatsApp Channel
அதுபோக அவிநாசி, உப்பிலிபாளையம், ராக்கிபாளையம், மடத்துப்பாளையம், சீனிவாசபுரம், மேட்டுப்பாளையம், காமராஜ் நகர், சேவூர் ரோடு, வ உ சி காலனி மற்றும் சக்தி நகர், வடக்கு ரத வீதிகள், குமரன் காலனி, அவிநாசி கைகட்டி புதூர் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
37% கேரள மக்கள் அந்த நோயால் உயிரிழக்கும் அபாயம்., மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!!