மக்களே ரெடியாகிக்கோங்க.., நாளை இந்த இடங்களில் மின்தடை.., உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க!!!

0
மக்களே ரெடியாகிக்கோங்க.., நாளை இந்த இடங்களில் மின்தடை.., உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க!!!
மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அந்தந்த துணை மின் நிலையங்களில் ஏற்படும் மின் பழுதுகளை சரிசெய்ய மாதம் தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக ஊழியர்களின் நலன் கருதி அந்த பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை தென்காசி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் மின் தேவை இருப்பின் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படி துணை மின் நிலையங்கள் அறிவித்துள்ளனர்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

கடையநல்லூர் மற்றும் கரிவலம்வந்தநல்லூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here