தமிழக அரசு மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி சில பகுதிகளில் ஏற்படும் மின் பழுதுகளை மாதம் தோறும் சரி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஊழியர்களின் பாதுகாப்புக் கருதி மின் பராமரிப்பு பணிகள் செய்யப்படும் இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் நாளை மதுரை மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அந்தப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு அந்த பகுதி துணை மின் நிலையங்கள் அறிவித்துள்ளனர்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
உசிலம்பட்டி, மறவர் பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராம கவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, சின்ன பாலமேடு, சுக்காம்பட்டி, கோணம் பட்டி, சாத்தையாறு அணை, எரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம் பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கி பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார் பட்டி, குறவன் குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு, மாணிக்கம் பட்டி, திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், ஐயர் பங்களா, வள்ளுவர் காலனி, சூலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, ஊமச்சிகுளம், கடச்சநேந்தல், மகாலட்சுமி நகர், உச்சப்பரம் மேடு, பார்க் டவுன், தபால் தந்தி நகர், பாமா நகர், பம்பா நகர், பொறியாளர் நகர், குடிநீர் வாரிய காலனி, செட்டிகுளம், சண்முகா நகர், விஜயநகர், கலை நகர், மீனாட்சி நகர், இபி காலனி, சூர்யா நகர், மீனாட்சி அம்மன் 1 முதல் 11 தெருக்கள், வி கே ஸ்வாமி நகர், மங்களகுடி, மருதங்குளம், சஞ்சய் நகர், கணபதி நகர், குடிநீர் வாரியநகர், சூர்யா நகர், அழகர்கோவில் மெயின் ரோடு, விஸ்வநாதபுரம், மகாத்மா காந்திநகர், முல்லை நகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், பொதிகை நகர், தார் காடு, கீழப்பனங்காடி, மேல பனங்காடி, சேதுபதி நகர், அப்துல் கலாம் காலனி, சுகந்தி நகர், அன்பு நகர், குலமங்கலம் ரோடு, ஆலங்குளம்.