பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.., இந்த மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை.., அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0

தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையை குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் பொதுவாக முக்கிய கோவில்களின் திருவிழா, பண்டிகைகளின் போது ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமான ஒன்று. இவ்வாறு அறிவிக்கப்படும் போது அரசு அலுவலர்களுக்கும் மற்றும் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு, அந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மற்றொரு நாளில் பணி செய்யும் நாளாக அறிவிக்கப்படுவது வழக்கம்.

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை பற்றிய தகவலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி உற்சவம் கோலாகலமாக நடைபெறும். அதே போல் இந்த ஆண்டு உற்சவ விழா தொடங்கிய நிலையில், இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ஐப்பசி மாத துலா உற்சவத்தின் கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு நாளை நவம்பர் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here