TNPSC குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.., காலவகாசம் மேலும் நீட்டிப்பு?? வெளியான அறிவிப்பு!!!

0
TNPSC குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.., காலவகாசம் மேலும் நீட்டிப்பு?? வெளியான அறிவிப்பு!!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட, 16 வகை, குரூப் – 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை வெளியிட்டது. அதன்படி மொத்தம் 6000 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் ஜனவரி 30 ம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஆன்லைனில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் கால அவகாசம் முடிவடைகிறது. மேலும் இந்த விண்ணப்பங்களில் ஏதேனும் பிழை இருந்தால் அதை மார்ச் 4 முதல் 6 தேதிக்குள் திருத்தி கொள்ளலாம் என்ற கால அவகாசமும் கொடுத்துள்ளனர். இந்நிலையில் பட்டதாரிகள் பலரும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here