தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தெற்கு வங்கக்கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.