தமிழகத்தில் நாளை (நவம்பர் 13) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (நவம்பர் 13) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மின்கசிவு மற்றும் மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. எந்தெந்த பகுதிகளில் உள்ள மின் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுகிறதோ அந்த பகுதிகளுக்கு மின்தடை அறிவிக்கப்படுகிறது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கான திறனாய்வுத் தோ்வு – நவ.17 முதல் விண்ணப்பிக்கலாம்!!!

அந்த வகையில், நாளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாசூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், அய்யமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவாநகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காட்டுப்புதூர், அம்மா செட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம் ஆகிய பகுதிகளுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here