தடுப்பூசி போட்டுகொண்டால் மூக்குத்தி, சோப்பு, தக்காளி, ஜூஸ் இலவசம் – மாநில அரசின் புதிய யுக்தி!!

0

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போடுவதற்கு மக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்த மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தடுப்பூசி விழிப்புணர்வு:

நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு 1.53 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு கட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் நாடு முழுவதும் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தற்போது நாட்டு மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு போதுமான அளவில் இல்லை. இதனால் நாட்டில் தகுதியுடையவர்கள் தடுப்புசி செலுத்துவதற்கு முன் வருவதில்லை. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் குஜராத் மாநிலம் ராஜ்கோர்டில் தடுப்பூசி போடும் பெண்களுக்கு மூக்குத்தியும், ஆண்களுக்கு பரிசு பொருட்கள் போன்ற இலவச அறிவிப்புகள் அறிவித்து தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் ஏற்பட்ட தடுப்பூசி தட்டுப்பாடு – மருந்து நிறுவனங்களுடன் பிரதமர் ஆலோசனை!!

அதேபோல் மும்பை தாராவி பகுதியில் மக்கள் தடுப்பூசி போட்டுகொண்டால் இலவசமாக சோப்பு மற்றும் ஜூஸ் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். தற்போது அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் மக்களுக்கு இலவச அறிவிப்பாக ஒரு கிலோ தக்காளி வேண்டும் என்றால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். மக்களை கவரும் வண்ணத்தில் பல அறிவிப்புகளை அறிவித்து மக்களை தடுப்பூசி போட முன்வருவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here