சூப்பரான ‘Egg Tomato Chilly’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
Shakshuka
Shakshuka

புரத சத்துக்கள் அதிகம் இருப்பதால் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளதால் அது எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலிமை சேர்க்கிறது. குழந்தைகள் தினமும் சாப்பாட்டில் முட்டை எடுத்துக் கொண்டால் நல்ல வளர்ச்சி அடைவார்கள். இப்பொழுது முட்டையை வைத்து சூப்பரான டிஷ் எப்படி செய்றதுன்னு பாப்போம்.

தேவையான பொருட்கள்

முட்டை – 4

தக்காளி – 3

குடைமிளகாய் – 2

பெரிய வெங்காயம் – 2

பூண்டு – 4 பல்

மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி

மஞ்சள்தூள் – ஒரு தேக்கரண்டி

கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி

செய்முறை:

முதலில் தக்காளியை சிறிதாக நறுக்கி அதனை மிக்ஸியில் போட்டு எடுத்துக் கொள்ளவும். பிறகு அதனை வடிகட்டி எடுக்கவும். அதன்பின் வெங்காயம், குடைமிளகாய், பூண்டு போன்றவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், குடைமிளகாய், பூண்டு போன்றவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

egg recipes
egg recipes

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

வதங்கியதும் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி அதன்பின் அரைத்து வைத்த தக்காளியை அதில் சேர்த்து கொதிக்க விடவும். ஓரளவுக்கு கொதித்ததும் முட்டையை கலக்காமல் அப்படியே முழுதாக ஊற்றவும். இதனை மூடி வைத்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கினால் சுவையான Egg Tomato Chilly தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here