பிரபல நடிகர் வீடு புகுந்து கத்தியால் குத்திக் கொலை – உறவினர் ஆவேசம்! போலீசார் தீவிர விசாரணை!!

0
ஆடு போல் வெட்டி கொல்லப்பட்ட மருமகள் - தலையுடன் போலீசில் சரணடைந்த கோவக்கார மாமியார்!!

பிரபல கன்னட நடிகர், சதீஷ் வஜ்ராவை அவரது உறவினர்கள் வீடு புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 அதிரடி கொலை :

கன்னட திரையுலகில் முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் நடிகர் சதீஷ் வஜ்ரா. பெங்களூரில் தனது, குடும்பத்துடன் இவர் வசித்து வந்தார்.  இவரது மனைவி அண்மையில் உயிரிழந்த நிலையில், இவர்களின் ஒரே பெண் குழந்தை இறந்த மனைவியின் வீட்டார் பராமரிப்பில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், திடீரென சதீஷ் வீட்டுக்குள் புகுந்த அவரின் மைத்துனர் சுதர்சன் மற்றும் உறவினர் நாகேந்திரன் ஆகியோர் அவரை சரமாரியாக குத்தினர். ரத்த வெள்ளத்தில் மயங்கிய சதீஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் நடிகர் சதீஷ் உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, கொலை செய்த இருவரையும் கைது செய்தனர். மேலும், தனது தங்கையின் சாவுக்கு சதீஷ் தான் காரணம் என நினைத்த சுதர்சன், இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம், கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here