தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிருப்தி!

0

தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வாக 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை வாங்கப்படுகிறது.

சுங்க கட்டணம் உயர்வு:

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையினரால் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும்.  இந்த முறையில், சில நாட்களுக்கு முன் ஹேஸ்டேக் என்ற ஒரு முறையை புதிதாக நெடுஞ்சாலைத்துறை அறிமுகம் செய்திருந்தது.  இந்த முறை மூலம், வாகன ஓட்டிகள் சுங்க சாவடிகளில் நெடு நேரம் நிற்காமல் உடனே கட்டணம் செலுத்தி விட்டு சென்று விடலாம் என்ற நிலை இருந்து வந்தது.

அறிமுகமாகிய நாட்களில் இருந்தே இந்த முறைக்கு மக்களிடம் வரவேற்பும், எதிர்ப்பும் இருந்து வருவது குறிப்பிடத் தகுந்தது. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன.

 

இந்த நிலையில்,  மாநிலத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளிலும் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி 21 சுங்கச்சாவடிகளில் 5% முதல் 10% வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஆண்டும் 24 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, வைகுந்தம், வீரசோழபுரம், சேலம் மேட்டுப்பட்டி, திண்டுக்கல் கொடைரோடு, தர்மபுரி பாளையம், குமாரபாளையம் விஜய மங்கலம், விழுப்புரம் விக்கிரவாண்டி மொரட்டாண்டி, உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி, தஞ்சை வாழவந்தான் கோட்டை, விருதுநகர் புதூர்பாண்டியாபுரம், மதுரை எலியார்பதி, நாமக்கல் ராசம்பாளையம், சேலம் ஓமலூர், நத்தக்கரை உள்ளிட்ட 24 இடங்களில் நள்ளிரவு முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.  இது வாகன ஓட்டிகளிடம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here