கட்டணம் செலுத்தினால் தான் தரமான சாலைகள் கிடைக்கும் – மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு!!

0
கட்டணம் செலுத்தினால் தான் தரமான சாலைகள் கிடைக்கும் - மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு!!
கட்டணம் செலுத்தினால் தான் தரமான சாலைகள் கிடைக்கும் - மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு!!

தரமான சாலைகள் வேண்டுமென்றால் மக்கள் பணம் செலுத்தி தான் ஆக வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் சர்ச்சை பேச்சு:

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் மக்கள் வெகுநேரம் காத்திருப்பதை தவிர்க்க ஹேஸ்டேக் எனும் முறை மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த முறை அறிமுகமான நாளில் இருந்தே பொது மக்களிடம் வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. இந்த நிலையில், பல சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கட்டணம் செலுத்தினால் தான் தரமான சாலைகள் கிடைக்கும் - மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு!!
கட்டணம் செலுத்தினால் தான் தரமான சாலைகள் கிடைக்கும் – மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு!!

இது மட்டுமல்லாமல், கட்டணம் வசூல் காலம் முடிந்த பிறகும் சில தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து சுங்கக் கட்டணங்களை வசூலித்து வருவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது போக முறைகேடாக பல இடங்களில் இந்த சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இவைகளை உடனே அகற்றுமாறு மத்திய அரசுக்கு அண்மையில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இன்னும் பல இடங்களில் இந்த நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

கட்டணம் செலுத்தினால் தான் தரமான சாலைகள் கிடைக்கும் - மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு!!
கட்டணம் செலுத்தினால் தான் தரமான சாலைகள் கிடைக்கும் – மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு!!

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் டௌ சாவில் உள்ள டெல்லி – மும்பை விரைவு சாலையை ஆய்வு செய்த மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த சுங்கச்சாவடி குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது, மும்பைக்கு விரைவு சாலை அமைப்பதால் பயண நேரம் 48 இல் இருந்து 18 மணி நேரமாக குறையும் என்றும் எரிபொருள் செலவு குறையும் எனவும் தெரிவித்தார். அது போக, தரமான சாலைகள் வேண்டுமென்றால் மக்கள் பணம் செலுத்தி தான் ஆக வேண்டும் என்று பேசியுள்ளார். அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சு மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here