டோக்கியோ பாராலிம்பிக்ஸ் அரையிறுதி முடிவு!!!

0

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருவது நாம் அறிந்த ஒன்றே. அந்த வகையில் இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை படேல் பாவினாப்பென் அரையிறுதி சுற்றில் ஷாங் மியோ என்பவருடன் விளையாடினார். அந்த போட்டியில் வென்றுள்ள படேல் அடுத்தகட்டமாக இறுதி போட்டியில் விளையாட உள்ளார். இதனால் இந்தியாவிற்கான முதல் பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் இவர் 2-3 என்ற கணக்கில் வென்றுள்ளார். இறுதி போட்டிகள் நாளை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 7.15 மணி அளவில் இந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது. இறுதி போட்டியிலும் பாவினா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லை என்றாலும் டேபிள் டென்னிஸ் மூலமாக ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கூடுதல் விஷயம் என்னவென்றால் பாவினா தான் இந்தியா சார்பில் முதன் முறையாக டேபிள் டென்னிஸ் விளையாடுகிறார். அதிலும் பதக்கமும் வாங்க போகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here