டோக்கியோ ஒலிம்பிக் 2021 – தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு ரூ.3 கோடி! முதல்வர் அறிவிப்பு!!

0
டோக்கியோ ஒலிம்பிக் 2021 - தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு ரூ.3 கோடி! முதல்வர் அறிவிப்பு!!
டோக்கியோ ஒலிம்பிக் 2021 - தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு ரூ.3 கோடி! முதல்வர் அறிவிப்பு!!

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ள அவனி லெகாராவுக்கு மூன்று கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அறிவித்துள்ளார்.

பரிசுத் தொகை :

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் அதே ஜப்பான் நாட்டில், தலைநகர் டோக்கியோவில் தொடங்கியது. இதில் இந்தியாவை சார்ந்த 54 வீரர், வீராங்கனைகள் 9 வகையான விளையாட்டில் களமிறங்கினர். இந்த நிலையில், இந்த போட்டிகளுக்கும் கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதில் இந்தியாவை சேர்ந்த வீர வீராங்கனைகள் மிக சிறப்பாக விளையாடி பதக்கத்தை குவித்து வருகின்றனர். இந்த நிலையில், டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்களான தேவேந்திரா மற்றும் சுந்தர் சிங் ஆகியோர் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கமும், வெண்கலப் பதக்கமும் வாங்கி கொடுத்திருக்கிறார்கள்.

டோக்கியோ ஒலிம்பிக்  2021 - தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு ரூ.3 கோடி! முதல்வர் அறிவிப்பு!!
டோக்கியோ ஒலிம்பிக் 2021 – தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு ரூ.3 கோடி! முதல்வர் அறிவிப்பு!!

மேலும், 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அவானி லெகாரா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை கொண்டாடும் விதமாகவும், பெருமைப்படுத்தும் விதமாகவும் ராஜஸ்தான் முதல்வர் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, ஈட்டி எரிதல் போட்டியில் சாதனை படைக்கும் விதமாக, வெள்ளி வென்ற தேவேந்திராவுக்கு ரூ.2 கோடியும், வெண்கலம் வென்ற சுந்தர் சிங்கிற்கு ரூ.1 கோடியும் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதோடு சேர்த்து, துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வாங்கிய அவனி லெகாராவுக்கு 3 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here