டோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதியில் தோல்வி அடைந்த பி.வி.சிந்து – வெண்கல பதக்கம் ஆச்சு வெல்வாரா??

0
டோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதியில் தோல்வி அடைந்த பி.வி.சிந்து - வெண்கல பதக்கம் ஆச்சு வெல்வாரா??
டோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதியில் தோல்வி அடைந்த பி.வி.சிந்து - வெண்கல பதக்கம் ஆச்சு வெல்வாரா??

2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களிற்கான அரையிறுதி பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தைவான் நாட்டை சேர்ந்த வீராங்கனை எதிர்த்து விளையாடினார். இந்த அரையிறுதி போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார் பி.வி.சிந்து.

அரையிறுதியில் தோல்வியை கண்ட பி.வி.சிந்து…

2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த டோக்கியோ நாடு முடிவு செய்தது அதற்கான பணிகளையும் தொடங்கியது. ஆனால் கொரோனா நோய் பரவல் காரணமாக நடக்கவில்லை. எப்படியாவது ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டும் என்று ஒரு மனதோடு இருந்தது டோக்கியோ நாடு. ஆனால் இப்பொழுது கொரோனா நோய் பரவல் குறைந்து வந்துள்ள இந்த நிலையில் ஒலிம்பிக் பொடியை கடந்த 23ஆம் தேதியில் இருந்து நடத்தி வருகிறது.

அரையிறுதியில் தோல்வியை கண்ட பி.வி.சிந்து...
அரையிறுதியில் தோல்வியை கண்ட பி.வி.சிந்து…

கொரோனா பரவலால் பல கட்டுப்பாடுகள், விதிமுறைகளை பின்பற்றி இந்த போட்டியை நடத்தி வருகிறது. இந்நிலையில் மகளிருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பாக பி.வி.சிந்து கலந்து கொண்டார். இவர் மிக அருமையாகவும் தெளிவாகவும் ஆட்டம் ஆரம்பித்ததில் இருந்தே விளையாடி வந்தார். இதுவரை நடைபெற்ற அனைத்து ஆட்டத்திலும் தோல்வி கொள்ளாமல் காலிறுதி ஆட்டம் வரை ஒரு செட்டை கூட விடாமல் வீரநடை போட்டு விளையாடி வந்த இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இன்று அரையிறுதி போட்டியில் கலந்து கொண்டார். பி.வி.சிந்துவின் அரையிறுதி ஆட்டத்தை அனைவரும் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

அரையிறுதியில் தோல்வியை கண்ட பி.வி.சிந்து...
அரையிறுதியில் தோல்வியை கண்ட பி.வி.சிந்து…

இந்நிலையில் இன்று தைவான் நாட்டை சேர்ந்த நம்பர் 1 சாம்பியன் ஆன சு-யிங் தை என்ற வீராங்கனையை எதிரித்து விளையாடினர். ஆட்டம் ஆரம்பித்தது பின் முதல் செட்டில் சு-யிங் தை 21 – 18 என்ற நேர் செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தியுள்ளார். இதனை தொடர்ந்து 2வது செட் நடைபெற்றது. அதிலும் 21 – 12 என்ற செட் கணக்கில் தைவான் வீராங்கனை சு-யிங் தை சிந்துவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால் அரையிறுதி போட்டியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 2016 ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறுவர் என்று அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. சரி வெள்ளிப்பதக்க ஆட்டம் தன தோழி அடைந்தார். வெண்கல பாதக போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீன வீராங்கனை ஹெ பிங் ஜியாவ்-ஐ சிந்து நாளை வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் எதிர்கொள்ள உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here