டோக்கியோ ஒலிம்பிக்: ஹாக்கி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி!!

0

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டியின் முதல் சுற்றில் நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

பொதுவாகவே ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடைசியாக 2016 ஆம் ஆண்டு இந்த போட்டிகள் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்து 2020 ஆம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக தடைபட்டது.

  

தற்போது இரண்டாம் அலை சிறிது ஓய்ந்துள்ள நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று (23 ஜூலை 2021) 2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்டது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையும் அதே சமயம் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரையும் நடக்கவுள்ளன.

தற்போது நேற்று நடந்த ஆடவர் ஹாக்கி போட்டியில்  இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியுள்ளது. நியூசிலாந்து அணியுடனான ஏ பிரிவு போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here