டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் 2021 – இந்திய பேட்மிண்டன் வீரர் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!!

0

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் பேட்மிண்டன் இறுதி சுற்றுக்கு முன்னேறி ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

இறுதி சுற்று:

தற்போது நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி நமது நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.  இதனால் பதக்க பட்டியலில் இந்தியா தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

இதனால், மக்களும் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.  இன்னும் சில நாட்களில் இந்த போட்டிகள் முடிவடைய உள்ளது குறிப்பிடத் தகுந்தது. நேற்றைய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் மிக சிறப்பாக விளையாடி இருந்தது கவனிக்கத்தக்கது.  குறிப்பாக, ஆடவருக்கான T64 உயரம் தாண்டுதலில்,  2.07 மீ உயரத்தை தாண்டி நமது இந்திய வீரரான பிரவீன்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மேலும், இந்திய வீராங்கனையான அவனி  லெகாரா 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதற்கு முன், 10 மீ துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற வரலாற்று சாதனை படைத்திருந்தார்.   இந்த நிலையில், இன்றைக்கு மிக தீவிரமாக விளையாடி வரும் வீரர்களால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகி உள்ளது.

அதாவது,  இந்தியாவின் சுஹாஸ் யத்திராஜ் ஆடவருக்கான பேட்மிண்டன் போட்டியில்,  21-9, 21-15 என்ற செட்டில் இந்தோனேஷிய வீரரை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இதனால், இவர் மீது மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here