தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை மையம் பகீர் அறிக்கை!!!

0
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை மையம் பகீர் அறிக்கை!!!

நேற்று தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்த நிலையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இன்று வெளியான வானிலை அறிக்கையில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

+2 துணைத்தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள்…, கல்வித் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அதே போன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இது தவிர அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

மேலும் இனி வரும் நாட்களில் மழை படிப்படியாக குறைந்து அதிகபட்ச வெப்பநிலை 2 – 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் இனி வழக்கத்தை விட கோடை வெயில் சுட்டெரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here