Saturday, April 20, 2024

இன்றைய தலைப்பு செய்திகளின் சுருக்கம்..!!

Must Read

இன்றைய தலைப்பு செய்திகள் சுருக்கம்..

தேசிய செய்திகள்

இந்தியாவில் ஜூலை 31க்குப் பிறகு ஊரடங்கு நீட்டிப்பு?? பிரதமர் மோடி ஆலோசனை!!

ஜூலை 31 ஆம் தேதி அன்லாக் 2.0 முடிவுக்கு வருவதால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அவர்கள் அனைத்து மாநில முதல்வர்களுடன் வரும் ஜூலை 27ம் தேதி திங்கட்கிழமை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வாக்குவாதத்தில் மூத்த அதிகாரியை சுட்டுக் கொன்ற சிஆர்பிஎப் வீரர் – டெல்லியில் பயங்கரம்!!

டெல்லியில் துணை ஆய்வாளர் ஒருவர் தனது மேலதிகாரியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை சுட்டு கொன்றுவிட்டு தானும் சுட்டு கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆபத்தான அணு ஆயுதங்களை தயாரிக்க பாகிஸ்தானுடன் சீனா ரகசிய ஒப்பந்தம்..!

இந்தியா மற்றும் போட்டி நாடுகளுக்கு எதிரான தாக்குதலுக்காக ஆபத்தான உயிரியல் ஆயுதங்களை தயாரிக்க பாகிஸ்தானும் சீனாவும் இரகசிய மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

கிழக்கு லடாக்கிலிருந்து படைகள் வாபஸ் – சீனா ஒப்புதல்!!

கிழக்கு லடாக்கிலிருந்து படைகளை முழுமையாக திரும்பப் பெறுவதற்கு இந்தியா, சீனா நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

மாநில முதல்வருக்கு கொரோனா உறுதி – அதிர்ச்சியில் மக்கள்!!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மாநில முதல்வருக்கே கொரோனா பாதித்து உள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மாநில செய்திகள்

முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், மாவட்ட ஆட்சியர் கே.ராஜமணி ஜூலை 25 மாலை 5 மணி முதல் ஜூலை 27 காலை 6 மணி வரை மாவட்டத்தில் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவித்து உள்ளார். அதாவது வழக்கமாக இருக்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஜெயலலிதாவின் வீட்டை கைப்பற்ற ரூ. 68 கோடி – நீதிமன்றத்தில் செலுத்தியது தமிழக அரசு..!

ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வீட்டிற்கான இழப்பீட்டு தொகை ரூ. 68 கோடியை செலுத்தியது தமிழக அரசு.

நில அளவீட்டு கட்டணம் 40 மடங்கு உயர்வு – தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் நில அளவீட்டு கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்ற எம்.எல்.ஏ வுக்கு கொரோனா!!!

கடந்த திங்கட்கிழமை புதுச்சேரி அரசு பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், அந்தக் கூட்டத் தொடரில் 3 நாள் பங்கேற்ற சட்டசபை உறுப்பினருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்க நிலவரம்

விண்ணைத் தொடும் தங்கத்தின் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!!

இன்றும் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 19 அதிகரித்து 4,904 ரூபாய்க்கும், ஒரு சவரன் 152 ரூபாய் உயர்ந்து ரூ. 39,232க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ஒரு கிராம் 66.90 ரூபாயாக உள்ளது.

செய்திகளின் முழு விவரம் அறிய தலைப்பை கிளிக் செய்யவும்

கொரோனா அப்டேட்ஸ்

கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் 200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் – விரைவில் வெற்றி என WHO தலைமை விஞ்ஞானி நம்பிக்கை!!

கொரோனாவுக்கு எதிராக மந்தை எதிர்ப்பு சக்தியை மனிதர்கள் பெறுவதற்கு நீண்டகாலம் ஆகும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்தது – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்..!!

கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த கொரோனா பரவல் தற்போது 42% ஆக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை 26% ஆக குறைந்து உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறி உள்ளார்.

சினிமா

ஆகஸ்ட் 1 முதல் நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் திறப்பு – உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை!!

ஆகஸ்ட் 1 முதல் நாடு முழுவதும் சினிமா அரங்குகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து பரிசீலிக்குமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு (ஐ & பி) செயலாளர் அமித் காரே உள்துறை அமைச்சகத்திற்கு (எம்ஹெச்ஏ) கடிதம் எழுதியுள்ளார்.

வணிகம்

மார்ச் 2021 க்குள் வங்கிகளின் மொத்த NPA 12.5 சதவீதமாக உயரக்கூடும் – ரிசர்வ் வங்கி அறிக்கை..!

அனைத்து வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்துக்கள் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 12.5 சதவீதமாக உயரக்கூடும் என ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை

தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு, மீனவர்களுக்கு எச்சரிக்கை – சென்னை வானிலை மையம்!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 

 

 

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -