Friday, March 29, 2024

இன்றைய தலைப்பு செய்திகளின் சுருக்கம்..!

Must Read

இன்றைய தலைப்பு செய்திகள் சுருக்கம்..!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கோவாக்சின் – சென்னை எஸ்ஆர்எம் மருத்துவமனையில் இன்று அதற்கான பரிசோதனைகள் ஆரம்பிக்க உள்ளது. 

இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது.சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று கோவாக்சின் மருந்து பரிசோதனை தொடங்குகிறது.

இன்று தனது 45 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், தமிழ் திரையுலக நடிகர் சூர்யா.

“நேருக்கு நேர் என்ற படம் மூலமாக தந்து திரைப்பயணத்தை ஆரம்பித்து உள்ளார், சூர்யா. நடிகர் சூர்யாவின் படத்தில் ஒரு தனித்துவம் இருக்கும் என்று கூட சொல்லலாம். அவர் நடிக்கும் படங்களில் ஒரு கருத்து சமூகத்திற்காக இருக்கும்

நடிகை வனிதா விஜயகுமாரை மிரட்டியதாக சூரியதேவி என்பவர் பழனி காவல்துறையினரால் கைது..!!

வனிதா திருமணம் குறித்து சூர்யா தேவி என்பவர் யூ டியூப் இல் கடுமையாக விமர்சித்து வந்தார். இது குறித்து வனிதா வடபழனி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இந்நிலையில் நேற்று நள்ளிரவு வடபழனி மகளிர் போலீசார் சூர்யா தேவியை அதிரடியாக கைது செய்தனர்.

6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்க தமிழக அரசு ரூ.5,137 கோடி மதிப்பில் ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது. 

தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் 16 புதிய நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 16 நிறுவனங்கள் ரூ.5,137 கோடி முதலீடு செய்வதால் 6,555 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.

இந்தியாவில் தனது மொத்த விற்பனையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.

வால்மார்ட் இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனம் 100% ஆர்வத்தை பெற்றுள்ளது, திறன்களை வலுப்படுத்தவும், வணிகத்திலிருந்து வணிக சேவை வழங்கலுக்காகவும் சிறந்த விலையை ரொக்கமாக எடுத்துச் செல்லும் வணிகத்தை இயக்குகிறது. இதனால் தனது மொத்த விற்பனையை இந்தியாவில் அறிமுகம் செய்ய காத்திருக்கிறது,பிளிப்கார்ட் நிறுவனம்.

கடத்தல்காரர்களிடமிருந்து தனது மகளை காப்பாற்ற போராடும் தாய் – வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ..!!

தனது மகளை கடத்த முயன்ற கடத்தல்கார்களிடம் இருந்து தாய் ஒருவர் காப்பாற்றும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தில் குழந்தையின் சொந்த பெரியப்பாவே கடத்தலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

100 பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்த புதுவை அரசு – அரசின் செயல்பாடுகளை எதிர்த்து போராடியதால் அதிரடி..!!

புதுச்சேரியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் 100க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள 13 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீண்டும் எல்லையில் இருந்து வெளியேற மறுக்கும் சீனா – லடாக்கில் பிரச்சனையை கிளப்பும் சீனா..!!!

சீன படைகள் வெளியேறிவிட்டதாக உறுதி அளித்தும் குறிப்பிட்ட சமவெளியிலிருந்து சீன படைகள் முழுமையாக வெளியேறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது இருநாடுகளிடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

கொரோனாவால் அதிகமாக விற்பனையாகிய ‘செக்ஸ் பொம்மைகள்’ – ஆன்லைன் விற்பனையில் மும்பை முதலிடம் என்று ஆய்வில் தகவல்.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பாலியல் பொம்மைகள் தயாரிப்பு விற்பனையின் தரவரிசையில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலும் இதன் விற்பனை அதிகரித்து உள்ளது என்பதை போக்குகள் வெளிப்படுத்துகின்றன.

கல்லூரிக்கு இறுதி ஆண்டு தேர்வுகள் குறித்து யு.ஜி.சி விளக்கம் அளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து விலக்கு அளிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு கடிதம் எழுதி உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை – விழி பிதுங்கும் மக்கள்!!

நாளுக்குநாள் அதிவேகத்தில் உயரும் தங்கத்தின் விலை – ஆபரணத் தங்கம் (22 காரட்) 42 ரூபாய் உயர்ந்து ரூ. 4815 க்கும், ஒரு சவரன் 336 ரூபாய் அதிகரித்து 38,250 ரூபாய்க்கு விற்பனை என விற்பனை..!!

உலக டாப் பணக்காரர்களில் 5வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் கம்பெனியின் பங்கு விலை உயர்வால், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, இன்றைக்கு 74.7 பில்லியன் டாலரைத் தொட்டு இருக்கிறது. இதனால் பணக்காரர்கள் பட்டியலில் இவர் 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் – மாநில முதல்வர் அறிவிப்பு!!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் உயிர் இறப்பவர்களின் குடும்பத்திற்கு 1 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார். ஏற்கனவே மாநில பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை அறிவித்து இருந்தார் முதல்வர் நாராயணசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்களை ஊதியமின்றி 5 ஆண்டுகள் வரை கட்டாய விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா முடிவு..!

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் கடும் நிதிச்சுழலில் சிக்கி தவித்துவருகிறது. இதன்காரணமாக தனது ஊழியர்களை குறைக்க முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்களை ஊதியமின்றி 5 ஆண்டுகள் வரையில் கட்டாய விடுப்பில் அனுப்ப முடிவுசெய்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு – வினாடிக்கு 5081 கன அடி நீர்!!

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67.54 கன அடியாக இருந்தது. வினாடிக்கு 5081 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.அணையின் நீரிருப்பு 30.62 டி.எம்.சி ஆக உள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -