தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் நாளை மழை பெய்ய இருக்கும் பகுதிகள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியதாவது, “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
பிரபல நடிகையுடன் ரகசிய காதல்… விரைவில் ராக் ஸ்டார் அனிருத்துக்கு திருமணம்? வெளியான ஷாக் தகவல்!!
மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல் நாளை அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று சென்னைவானிலை மையம் தெரிவித்துள்ளது.