தமிழக மக்களே., இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு., வானிலை மையம் அறிவிப்பு!!

0
தமிழக மக்களே., இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு., வானிலை மையம் அறிவிப்பு!!

கடந்த சில வாரங்களாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை குறைந்து பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த ஏழு நாட்களுக்கு நிலவும் வானிலை நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட நிலையில் வானிலை இருக்குமாம்.

மேலும் 13.2.2024 அன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதோடு கடலில் எந்த ஒரு சூறாவளி காற்றுக்கும் வாய்ப்பில்லாத காரணத்தால் மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல எந்த ஒரு தடையும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here