மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அலர்ட்!!!

0
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு  வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று இரவு முதல் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த மூன்று மணி நேரத்தில் தென்காசி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் இது மட்டுமல்லாமல் உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here