தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து சில முக்கிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்.., மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.., வெளியான திடீர் அறிவிப்பு!!!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும் நாளை மற்றும் மறுநாள் சில மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.