தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!! 

0
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்..
சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (மே 30) முதல் ஜூன் 5 ம் தேதி வரை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மே 31 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை மேலே குறிப்பிட்ட பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவ கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடனே இருக்குமே தவிர அதிக பட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here