தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்த தக்காளி விலை தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. விளைச்சல் பாதிப்பால் கடந்த மாதம் முதல் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் நடுத்தர ஏழை குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டனர். ஆனால் தற்போது தக்காளி விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு கொண்டே இருப்பது மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதிலும் இன்றைய நிலவரப்படி பார்த்தால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை விலைக்கு ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கும், மொத்த விலைக்கு 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் முதல் 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது பத்து ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.