தமிழக மக்களே உஷார் – இன்று 34 மாவட்டங்களில் மழை கொட்ட போகுது! உங்க பகுதியும் இருக்கானு பாருங்க!!

0
தமிழக மக்களே உஷார் - இன்று 34 மாவட்டங்களில் மழை கொட்ட போகுது! உங்க பகுதியும் இருக்கானு பாருங்க!!
தமிழக மக்களே உஷார் - இன்று 34 மாவட்டங்களில் மழை கொட்ட போகுது! உங்க பகுதியும் இருக்கானு பாருங்க!!

தமிழகத்தில் இன்று 34 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கடந்த 21.09.2022 முதல் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இது மட்டுமில்லாமல் புதுவை, காரைக்கால் பகுதிகளில்லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இன்ஸ்டாவில் வந்த புத்தம் புது அப்டேட் – இதுக்கு தாம்பா ரொம்ப நாளா Waiting! குஷியில் பயனர்கள்!!

அதாவது, காஞ்சிபுரம்,திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ஈரோடு, வேலூர்,திருப்பூர் கோவை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் நாமக்கல், தென்காசி, சேலம், கன்னியாகுமரி திருவண்ணாமலை, விழுப்புரம், கரூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி,நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here