இப்படியே போனா இனி சைக்கிள் தான் போல… தொடர்ந்து உயர்வில் பெட்ரோல்,டீசல் விலை!!!

0

மக்களின் மிக முக்கிய தேவையாக விளங்கும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாள்தோரும் நிலைத்தன்மையைற்று இருக்கிறது. தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 98.40-ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 92.58-ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையிலேயே மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்து தரப்பு மக்களும் தங்களின் பயணத்திற்கு வாகனங்களை  நம்பிக்கிருக்கின்றனர். இதன் காரணமாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறுதல் மற்றும் மாறுதல் அவர்களை மிகவும் பாதிக்கிறது. அண்டை மாநிலங்கள் பெட்ரோல், மற்றும் டீசல் விலையில் சதத்தை அடித்துவிட்டன. தமிழகத்திலும் ஒரு சில நாட்களில்  இந்த நிலையை எட்டிவிடும் என்ற நிலைமை தற்போது நிலவி வருகிறது.

அதன் படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அதாவது மதுரை,கோவை  மற்றும்  வேலூர் முறையே  ரூ.99.17,ரூ.98.97 மற்றும் ரூ.99.58 விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையை ஆயில் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நிர்ணயிக்கின்றனர்.

அதேபோல் தமிழக தலைநகரான சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் முறையே  ரூ.98.40 மற்றும் ரூ.92.58 விற்பனை செய்யப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here