மக்களை தவிக்க விடும் பெட்ரோல், டீசல் விலை …! – இன்றைய விலை நிலவரம் !!!

0

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தினமும் மாற்றத்தை சந்திக்கக்கூடியவை.  இந்நிலையில் இன்றைய பெட்ரோல், டீசலின் விலை எந்தவித மாற்றத்தையும் எதிர்கொள்ளாமல் நேற்றைய விலையிலையே தொடர்ந்து நீடிக்கிறது. அதன்படி , சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.49-க்கும் மற்றும் டீசல் ரூ.93.46-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை  கடந்த சில  வாரங்களாக அதிரடி  ஏற்றத்தில் இருந்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இதன் விலை 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இது மக்கள் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த விலை ஏற்றம் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியும் ஆங்காங்கே போராட்டங்களையும்  நடத்தி வருகின்றனர். இந்த மாதத்தின் தொடக்கத்தில்  ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முறையே 95.99 ரூபாய்க்கும் மற்றும்  90.12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், தற்போது இதன் விலை கிடுகிடுவென உயர்ந்து சதத்தை எட்டும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. மத்திய அரசு எண்ணெய் நிர்வனங்களே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதி வழங்கியதில் இருந்து இதன் விலை உச்சத்தை அடைந்து விட்டது. அந்த வகையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலையே விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.49-க்கும் மற்றும் டீசல் ரூ.93.46-க்கும் என்ற விலையிலையே  தொடர்ந்து நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here