இன்னைக்கு என்ன நிலைமையில் இருக்கு பெட்ரோல்,டீசல் விலை…! தெரிஞ்சுக்க இங்க பாருங்க!!!

0

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை சதத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் எந்த வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலையே விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது விலையில் அமைதி காத்த பெட்ரோல் மற்றும் டீசலின் விலை. அதன் பின்பு சற்று படிப்படியாக உயர தொடங்கியது. இந்நிலையில் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் 100ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்பட்டு வந்தது பெட்ரோல் மற்றும்  டீசல். ஆனால்  அதன் விலை மெல்ல மெல்ல அதிகரித்து இப்பொழுது வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது. இந்த விலை ஏற்றம் மக்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளது. மேலும் தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் சதத்தை எட்டிய நிலையில் தமிழக தலைநகரில் அது சதத்தின் அருகிலேயே  இருந்தது.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த உச்சத்தையும் அது எட்டி விட்டது. கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றனர். அதன் படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75ரூபாய்க்கும் மற்றும் டீசல் ஒரு லிட்டர் 93.91ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்த எரிபொருட்கள் நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here