கதிரின் ஹோட்டல் பிசினஸை கெடுக்க திட்டம்., மறைந்திருந்து பார்த்த தனம்! சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

0
கதிரின் ஹோட்டல் பிசினஸை கெடுக்க திட்டம்., மறைந்திருந்து பார்த்த தனம்! சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!
கதிரின் ஹோட்டல் பிசினஸை கெடுக்க திட்டம்., மறைந்திருந்து பார்த்த தனம்! சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விறுவிறுப்பான காட்சிகளுடன் செல்கிறது. இன்றைய எபிசோடில் குடும்பத்தில் அனைவரும் உட்கார்ந்து பேசி கொண்டிருக்கின்றனர். மூர்த்தி சீக்கிரமே, நாம புது வீட்டுக்கு போகணும்னு சொல்லுகிறார். அதை அனைவரும் ஆமோதிக்கின்றனர். பின்னர் தனம் முல்லையை “சீக்கிரம் சாப்பிட்டு லேட் ஆக தூங்கணும்” என்று கூறுகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அப்போது கதிர் ஒரு வாழைத்தாருடன் வீட்டுக்கு வருகிறார். தனம் எதுக்கு இவ்ளோ? என்று கேட்டதற்கு எல்லாரும் சாப்பிடுவதற்கு என்று கூறுகின்றனர். உடனே மீனா ” எல்லாருக்குமா இல்லை முல்லைக்கு மட்டுமா ” என்று கேட்கிறார். பின்னர் முல்லையை கதிர் மிகவும் தாங்குகிறார். இதனால் மீனா கதிரை கலாய்க்கிறார். பின்னர் தனமும், மீனாவும் கதிர் ரொம்ப மாறிவிட்டதாக பேசி கொள்ளுகின்றனர்.

இளம் இயக்குனரை கழட்டி விட்டுட்டு, 90ஸ் இயக்குனருடன் கைகோர்த்த சூப்பர் ஸ்டார்., காரணம் இதானா?

பின்னர், மீனா சமைத்து கொண்டிருக்கிறார். ஜீவா கயலை பற்றி விசாரிக்கிறார். மீனா எப்போதும் போல ஜீவாவிடம் வம்பிழுக்கிறார். அதற்கு ஜீவா மீனாவை கலாய்த்து விட்டு சென்றுவிடுகிறார். மறுநாள் காலை கதிரின் ஹோட்டல் எதிரி தனது அடியாளை அனுப்பி கதிர் ஹோட்டலின் வியாபாரத்தை கெடுக்க சொல்லுகிறார். அவருடன் அடியாள் பேசிக்கொண்டிருக்கும் போது தனம் பார்த்து விடுகிறார். இதோடு இன்றைய எபிசொட் நிறைவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here