Tuesday, April 23, 2024

இன்றைய தலைப்பு செய்திகள்!!

Must Read

இன்றைய தலைப்பு செய்திகள் சில..

  • செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் பொது முடக்கம் நிறைவடைவதால் தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்க முதல்வர் பழனிசாமி இன்று ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.
  • கொரோனா பரவல் இன்னும் முடிவு பெறாத நிலையில் மேலும் புதிதாக “கேட் கியூ” என்ற வைரஸ் சீன நாட்டில் இருந்து பரவுவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இது மூன்று வகையான கொசுக்களிடம் இருந்து பரவுவதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  • அக்டோபர் மாதம் முதல் பள்ளிகளுக்கு மாணவர்கள் தங்கள் சுயவிருப்பத்தின் பெயரில் பள்ளிகளுக்கு வரலாம் என்று கூறியதை அடுத்து பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று தான் பள்ளிக்கு வர வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
  • ரேஷன் அட்டைதாரர்களுக்கு சரியாக பொருட்கள் கிடைப்பதில் பல குளறுபடிகள் ஏற்பட்டதால் ரேஷன் கடைகளில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது புதிய “பயோமெட்ரிக்”நடைமுறை.
  • கொரோனா பரவல் அதிகமாக தமிழகத்தில் இருப்பதால் அக்.1 முதல் பள்ளிகள் திறக்க அரசாணை வெளியிட்டபட்டதை நிறுத்தி வைக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
  • கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ரயில் சேவைகள் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 100 சதவீத பணியாளர்களுடன் சேவை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கொரோனா நோய் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து தமிழகத்தில் அக்டோபர் மாதம் தியேட்டர்கள் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் திறக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.
  • தமிழகத்தில் காலியாக உள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 1 மக்களவை தொகுதிக்கு இப்போதைக்கு இடைத்தேர்தல் நடைபெற சாத்திய கூறுகள் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
  • திருப்போரூர் ஆளவந்தான் அறக்கட்டளை சொத்துக்களை இரண்டு வாரங்களில் ஆட்சியர் அளவீடு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • கொரோனா நோய் பரவல் காரணமாக நீதிமன்றத்தில் காணொளி கட்சியாக தான் விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால், தற்போது அக்டோபர் 5ம் தேதி முதல் ஐகோர்ட்டில் நேரடி வழக்கு விசாரணை நடைபெரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
  • இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையிலிருந்து அக்.1ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
  • கடந்த சில நாட்களாக லடாக் எல்லையில் அசாதாரண சூழல் தொடர்வதாகவும் ராணுவத்தினர் இடையே மோதல்கள் வலுத்து வருவதாகவும் இந்திய விமானப்படை தளபதி தகவல் தெரிவித்துள்ளார்.
  • கடந்த 25 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று மருத்துவமனை குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வந்த தங்க விலை இன்று அதிகபட்சமாக உயர்ந்துள்ளது இன்று சவரனுக்கு 608 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 63.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
  • வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
  • இந்திய கவுன்சில் மருத்துவ ஆராய்ச்சி (ஐ.சி.எம்.ஆர்) கவுன்சில் வெளியிட்ட இரண்டாவது தேசிய கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 10 வயதுக்கு மேற்பட்ட 15 நபர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஆகஸ்ட் மாதத்தில் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -