தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்.., இந்த திட்டத்தை விரிவுபடுத்த ஆலோசனை!!

0
தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்.., இந்த திட்டத்தை விரிவுபடுத்த ஆலோசனை!!
தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்.., இந்த திட்டத்தை விரிவுபடுத்த ஆலோசனை!!

காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை விரிவுபடுத்த முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழக மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் திறனை அதிகரிக்கவும், இடை நிற்றலை குறைக்கவும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை தொடர்ந்து காலை சிற்றுண்டி உணவு திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இத்திட்டம் இப்போது பல மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நிலையில் மேலும் விரிவுபடுத்த தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், பள்ளிக் கல்வி அதிகாரிகளுடன் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

சரத்பாபு மரணம் குறித்து பரவி வந்த வதந்தி?? அதிகாரப்பூர்வ தகவல் கொடுத்த சகோதரி!!

இந்த கூட்டத்தின் முடிவில் வரவிருக்கும் கல்வியாண்டில் 30,122 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் 1 முதல் 5 ம் வகுப்பு படிக்கும் பல லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்று தான் தெரிகிறது. இந்த திட்டத்திற்கு பெற்றோர்கள் பலரும் தங்களது வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here