இந்த மூன்று ராசிக்காரங்க கட்டாயம் ஜாக்கிரதையா இருக்கணும்.., முழு ராசிபலன் உள்ளே!!

0
இந்த மூன்று ராசிக்காரங்க கட்டாயம் ஜாக்கிரதையா இருக்கணும்.., முழு ராசிபலன் உள்ளே!!
இந்த மூன்று ராசிக்காரங்க கட்டாயம் ஜாக்கிரதையா இருக்கணும்.., முழு ராசிபலன் உள்ளே!!

Enewz வாசகர்களே இன்றைய நாள் உங்களுக்கு எப்படி எல்லாம் இருக்க போகிறது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

மேஷம் ராசிபலன்:

மேஷம் ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக அமையும். நண்பர்களிடம் பார்த்து பழகுவது நல்லது. தேவையில்லாத வீண் பேச்சுக்களை குறைத்து கொள்ளுங்கள். எதிர்பார்த்த வரவு கிட்டும் நாள். சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

ரிஷபம் ராசிபலன்:

ரிஷபம் ராசி நேயர்களே, நீங்கள் நினைத்த காரியத்தை விரைவில் முடிப்பீர்கள். இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. கடவுள் பக்தி அதிகரிக்கும் நாள் இது. பொறுமையாக இருந்து வெற்றியை ஈட்ட வேண்டிய நாள்.

மிதுனம் ராசிபலன்:

மிதுனம் ராசி நேயர்களே, நீங்கள் நினைப்பது ஒன்றாக இருக்கும், ஆனால் நடப்பது வேறு ஒன்றாக இருக்கும். நட்புகள் இடையே சண்டைகள் வந்து செல்லும். சொந்தகாரர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. வீண் தகராறில் ஈடு படாமல் இருந்தால் இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.

கடக ராசிபலன்:

கடக ராசி நேயர்களே, வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள் இது. நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும். இல்வாழ்க்கையில் இன்பம் உண்டாகும். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். நன்மைகள் உண்டாகும் நாள் இது.

சிம்ம ராசி பலன்:

சிம்ம ராசி நேயர்களே, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அலுவலத்தில் சக ஊழியர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி கிட்டும். விசேஷத்திற்கு சென்று வருவீர்கள். உங்களுக்கு பிடித்தவர்களிடன் அனுசரித்து செல்வது நல்லது. கண்ணுக்கு தெரியாத எதிரியை இன்று அடையாளம் காணுவீர்கள். முக்கியமான முடிவு எடுக்கும் நாள்.

கன்னி ராசிபலன்:

கன்னி ராசி நேயர்களே, சொந்த தொழில் செய்பவர்களுக்கு இன்றைய நாளில் லாபம் கூடும். ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் நாள் இது. அலுவலகத்தில் நல்ல பெயர் உண்டாகும். கையில் அதிக பணங்கள் புழங்கும். தீராத பிரச்னைகள் தீரும். நகைகள் வாங்க யோகமான நாளாக உங்களுக்கு அமையும்.

துலாம் ராசிபலன்:

துலாம் ராசி நேயர்களே, குலதெய்வத்தை தேடி செல்லும் நாள். ஆசைப்பட்ட பொருட்கள் கைக்கு வரும். நிலம் வாங்க ஆசைப்படும் நபர்கள் இன்று வாங்கலாம். நீங்கள் நினைத்த காரியங்கள் கிட்டும். உடன்பிறப்புகளால் ஆதாயம் கிட்டும்.

விருச்சிக ராசிபலன்:

விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் கோவத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். எந்த ஒரு முடிவையும் ஒன்றுக்கு 3 தடவை யோசித்து எடுப்பது நல்லது. நீண்ட காலமாக பிரிந்து இருந்த சொந்தங்கள் ஒன்று சேருவார்கள். பொறுமையை கடைபிடிக்கும் நாள்.

தனுசு ராசிபலன்:

தனுசு ராசி நேயர்களே, இது உங்களுக்கு இன்பமும் துன்பமும் கலந்த நாளாக இன்று அமையும். உங்களை நீங்களே புரிந்துகொள்ளும் நாள். விலகி இருந்த சொந்தம் மீண்டும் வந்து சேரும். காதல் கைகூடும் நாள். எந்த சந்தோஷத்திலும் ஜாக்ரதையாக இருப்பது நல்லது.

மகரம் ராசிபலன்:

மகர ராசி நேயர்களே, நினைத்தது கைகூடும் நாளாக உங்களுக்கு அமையும். விசேஷ நேரங்களில் பொறுமை காப்பது நல்லது. உயரதிகாரிகளிடம் இருந்து பாராட்டுக்கள் கிடைக்கும். செய்யும் வேலையில் கவனம் தேவை. அந்நியர்களின் சகவாசத்தை தவிர்க்கவும்.

கும்பம் ராசிபலன்:

கும்ப ராசி நேயர்களே, உங்கள் வாழ்க்கையில் இந்த நாள் திருப்புமுனையாக அமையும். செய்த தவறை நினைத்து உங்களிடம் மன்னிப்பு கேட்பார்கள். உங்கள் எண்ணம் போல இன்றைய நாள் உங்களுக்கு அமையும். எந்த சமயத்தில் வார்த்தையை பார்த்து பயன்படுத்துங்கள்.

மீனம் ராசிபலன்:

மீன ராசி நேயர்களே, பிள்ளைகளால் உங்களுக்கு நன்மை உண்டாகும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த காரியம் இன்று கை கூடும். குடும்ப ஒற்றுமை சிறக்கும். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பொன் பொருள் வாங்க திட்டமிடுவீர்கள். ஆன்மீக பயணம் உங்களுக்கு நன்மை பயக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here