Thursday, June 24, 2021

வரலாறு காணாத உச்சத்தில் தங்கத்தின் விலை – சவரன் 38 ஆயிரத்தை தாண்டியது!!

Must Read

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 38 ஆயிரம் ரூபாயை தாண்டி உள்ளது. வரலாறு காணாத இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இன்றைய விலை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆரம்பத்தில் 3 மாதங்களாக கடைகள் அடைக்கப்பட்டு நகை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது பாதுகாப்பு கருதி அதிகளவில் முதலீடு செய்த காரணத்தால் விலை உயர்ந்து கொண்டே சென்றது. தற்போது கடைகள் திறக்கப்பட்டு நகை வியாபாரம் நடைபெற்று வரும் நிலையில் தேவை அதிகரிக்கும் காரணத்தால் விலை உயர்கிறது.

நவம்பர் மாதத்திற்குள் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி இந்தியாவில் அறிமுகம் – இந்திய சீரம் நிறுவனத்தின் CEO..!

இன்று தங்கத்தின் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்திற்கு சென்று உள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) 68 ரூபாய் அதிகரித்து ரூ. 4,785 க்கும், ஒரு சவரன் 544 ரூபாய் அதிகரித்து வரலாற்றில் முதல் முறையாக 38,280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. ஒரு கிராம் வெள்ளி 5.60 ரூபாய் அதிகரித்து, 65.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ ரூ. 65,700 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கும் ராஜாராணி நடிகர் – ஒருவேளை ;சொந்தக்காரங்களா இருப்பாங்களோ??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் ஹீரோவின் தம்பியாக நடித்து வரும் பாலாஜி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து எடுத்த புகைப்படம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -