சவரனுக்கு 288 ரூபாய் உயர்ந்த தங்கம் – கலக்கத்தில் மக்கள்!!

0
gold rate today
gold rate today

இம்மாத தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து சரிந்து கொண்டே இருந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதன் தேவை அதிகரிப்பதே விலை உயர்வுக்கு காரணம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இன்றைய விலை:

2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸினால் உலக பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தது. இதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது. இதன் விளைவு பங்குச்சந்தை, அமெரிக்க டாலர் மதிப்பு, ரியல் எஸ்டேட் என பல துறைகளில் எதிரொலித்தது. இதனால் பாதுகாப்பான முதலீடுகள் (தங்கம்) பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியது. இதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்ளில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஊரடங்கு காலத்தில் மட்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்த விலை ஒரு சவரன் 43 ஆயிரத்தையும் தாண்டியது. அதன் தேவை அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு காரணம் என கூறப்பட்டது. மேலும் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு நகை வியாபாரம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே 4 ஆயிரம் ரூபாய் வரை தங்கத்தின் விலை குறைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாடு முழுவதும் செப்.25 முதல் 46 நாட்களுக்கு முழு ஊரடங்கு – வெளியான தகவல் உண்மையா??

கடந்த சில நாட்களாக விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை ரூ.36 அதிகரித்து ரூ.4,952க்கும், ஒரு சவரன் 288 ரூபாய் உயர்ந்து ரூ.39,616 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.71.30 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here