சந்தோஷத்தில் மூழ்கிய நகைப்பிரியர்கள் – மீண்டும் சரிவில் தங்கத்தின் விலை!!

0

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று சற்று விலை அதிகரித்து இருந்த நிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் நகை வியாபாரம் அதிகரித்து உள்ளதாக கடை உரிமையாளர்கள் கூறி உள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

தொழில்துறைகளில் ஏற்பட்ட சரிவால் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரித்ததே அதன் விலை உயர்விற்கு முக்கிய காரணம். இதனால் தான் ஊரடங்கில் கடைகள் மூடப்பட்டு நகை வியாபாரம் நடைபெறாமல் இருந்த போதிலும் அதன் விலை உயர்ந்து கொண்டே சென்றது. ஆகஸ்ட் மாத மத்தியில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 43 ஆயிரம் ரூபாயை தாண்டியது நகைப்பிரியர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

காருக்குள் வருங்கால கணவருடன் போட்டோ எடுத்த சித்ரா – இணையத்தில் வைரல்!!

இந்நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 1700 ரூபாய்க்கு மேல் தங்கத்தின் விலை குறைந்து உள்ளது. இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை 9 ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல் ஒரு சவரன் 72 ரூபாய் சரிந்துள்ளது. வெள்ளியின் விலையும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் குறைந்துள்ளது.

  • ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 காரட்) – ரூ. 4,780
  • ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை (22 காரட்) – ரூ. 38,240
  • ஒரு கிராம் வெள்ளியின் விலை – ரூ. 62.40
  • ஒரு கிலோ வெள்ளியின் விலை – ரூ. 62,400

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here