குறைந்தது தங்கத்தின் விலை…!அடித்தது ஜாக்பாட்!!!

0

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற தாழ்வுகள் இருந்து வந்தது. மேலும் தங்கத்தின் விலை  திடீரென உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை தந்துவிடுகிறது. ஆனால் இன்று அது மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்து உள்ளது. அதாவது, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து உள்ளது.

தங்க நகைகள் ஒரு ஆடம்பர பொருளாக மட்டுமல்லாமல் பெண்களுக்கான ஒரு விருப்ப பொருளாகவும் உள்ளது. மேலும் இதில் முதலீடு  செய்ய அனைத்து தரப்பு மக்களும் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் தங்கத்தில் முதலீடு செய்வதை ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதுகின்றனர். இதனாலேயே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்றத்தை சந்திக்கிறது. இந்நிலையில் கடந்த மாதத்தில் தங்கத்தின் விலை மிகுந்த அளவு குறைந்து மக்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து தங்கத்தின் விலை போக்கு காட்டி வருகிறது. அந்த வகையில் தங்கம்  இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.36,160க்கு விற்கப்படுகிறது. அதாவது கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,520க்கு விற்கப்படுகிறது. அதே போல் வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து ஒரு கிலோ வெள்ளி 73,400 விற்கப்படுகிறது. மேலும் கிராம் வெள்ளி 70 காசுகள் குறைந்து ரூ.7,340க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here