Saturday, May 15, 2021

மோடி வருகை எதிரொலி – #GoBackModi என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்!!

Must Read

சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தற்போது தமிழகம், கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களுக்கு செல்லவுள்ளார். இந்நிலையில் இணையத்தில் இவரது வருகையை எதிர்த்து #GoBackModi என்னும் ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது.

நரேந்திர மோடி:

நமது நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி இன்று காலை தமிழகத்திற்கு வந்தடைந்தார். கோவை விமான நிலையத்திற்கு வந்த நரேந்திர மோடி அங்கிருந்து கேரளா சென்றார். அவர் அங்கு சென்று பாலக்காட்டில் தனது தேர்தல் பிரச்சார வேலைகளை நடத்தவுள்ளார். பின்பு இன்று பிற்பகல் அங்கு இருந்து மோடி மீண்டும் தமிழகத்திற்கு வந்து தாராபுரத்தில் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த பிரச்சாரத்தில் முதலவர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பார். அதற்கு பின்பு அவர் புதுவையில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க புதுவை செல்கிறார். அங்கு மோடியுடன் கூட்டணி கட்சி தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். மேலும் அங்கு அதற்கான பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் புதுவைக்கு மோடி வருகை தரவுள்ளதால் அங்கு இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘ஒட்டு போடுங்க இல்லேன்னா சுடுகாட்டுல போடுங்க’ – சீமான் ஆவேசம்!!

இந்நிலையில் மோடி வருகையை எதிர்த்து இணையத்தில் #GoBackModi என்னும் ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு ஏற்கனவே மோடி தமிழகத்திற்கு பல திட்டங்களை துவக்கி வைப்பதற்காக வந்த பொழுது இதே ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ட்விட்டர் தளத்தில் #GoBackModi என்னும் ஹேஸ்டேக் 102k ட்விட்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் அதற்கான மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

கொரோனாவை தொடர்ந்து மக்களை அச்சுறுத்த வரும் புதிய நோய் – வேகமாக பரவும் கருப்பு பூஞ்சை!!

இந்தியாவில் தற்போது கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் மக்களை துன்புறுத்தி வரும் நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை என்னும் புதிய வகை நோய் சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -