சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் கவின். கோலிவுட் திரையில் இவரது ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் விதமாக இவரது சினிமா கெரியரை தொடங்கி நிலையில் அவ்வவ்போது படங்களில் கிடைக்கும் சிறிய ரோல்களை ஏற்று நடித்து வந்தார். அப்போது தான் மீண்டும் விஜய் டிவிக்குள் ரீ என்ட்ரி கொடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதை தொடர்ந்து ”நட்புனா என்னானு தெரியுமா” படத்தில் ஹீரோவாக அறிமுகம் கொடுத்து வந்த இவர் தற்போது ”டாடா” திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி திரைக்கு வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து இன்று வரை 20 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளது. மேலும் ரசிகர்கள் இப்படத்துக்கு கொடுத்து வரும் ஆதரவிற்கு நன்றி சொல்லும் விதமாக இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கவின்.
ச்சை.., சம்பாதிக்க வக்கு இல்ல…, ஜீவாவை அசிங்கப்படுத்திய பார்வதி.., மொத்தமாக பொட்டியை கட்டிய மீனா!!
அதில் ”இந்த படம் என்னுடைய 12 வருட கனவு என ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். அப்படிப்பட்ட என்னுடைய பல நாள் கனவுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த ரசிகர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி”. மேலும் இப்படம் இன்று முதல் ஓடிடி ப்ரைம் திரையில் வெளியாக உள்ளது. இதற்கும் மக்களாகிய நீங்கள் திரையரங்குகளில் கொடுத்து வரும் அதே ஆதரவை ottக்கும் கொடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.