தமிழகத்தில் ஒரே நாளில் 22,651 பேருக்கு கொரோனா உறுதி – 463 பேர் உயிரிழப்பு!

0

தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ் நாட்டில் இன்று ஒரே நாளில் 22,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 463 பேர் இறப்பை தழுவியுள்ளனர்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் அதிகரித்த தொற்று எண்ணிக்கை முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் படிப்படியாக குறைந்து 25,000 க்கும் கீழே சென்று இருக்கிறது. அதன்படி இன்று கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 22651 மட்டுமே.தமிழகத்தில் தற்போது வரை உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,68,698 ஆக உள்ளது. இன்று மட்டும் 33,646 குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனா பரவலை மேலும் தடுக்க, தடுப்பு பணிக்காக அதிக அளவிலான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. குறிப்பாக பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு மட்டும் தனித்தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

கொரோனா பாதிப்பு வழக்கம் போல் திருப்பூர், கோவை,திருச்சி, சேலம், ஈரோடு, உள்ளிட்ட நகரங்களில் தான் அதிகமாக உள்ளது. எனினும் நேற்றைக்கு ஒப்பிடும் இன்று கணிசமாக குறைந்துள்ளது. படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு மக்களிடத்தில் மீண்டும் நம்பிக்கையை துளிர்விட செய்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here