தாராளமாய் உயரும் தங்கத்தின் விலை – தவிக்கும் மக்கள்!!

0

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களில் மட்டும் வரலாறு காணாத அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளது. ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்காத அளவில் விலை அதிகரிக்கும் காரணத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விலை அதிகரிப்பு காரணம்:

உலக பொருளாதாரத்தையே அடி மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது கொரோனா பரவல். இதனால் பல தொழில்துறையில் நஷ்டம் அடைந்து வருகிறது. இதனால் உற்பத்தி குறைந்த காரணத்தால் விலைவாசி உயர்ந்து வருகிறது. தற்போது ஊரடங்கு தளர்வுகளால் தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி பழைய நிலைக்கு சிறிது சிறிதாக திரும்பி வருகிறது.

தகுந்த காரணம் இன்றி கைது செய்யக்கூடாது – டிஜிபி சுற்றறிக்கை!!

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

மக்களும் நிறுத்தி வைத்திருந்த சுப நிகழ்ச்சிகளை நடத்த தொடங்கி உள்ளனர். அதற்காக தங்க நகை வாங்கச் செல்லும் மக்கள் அதன் விலையைக் கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அதன் மீதான முதலீடு பன்மடங்கு அதிகரித்தது தான். இதனால் வரும் காலங்களில் விலை மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இன்றைய விலை:

சென்னையில் ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் 28 ரூபாய் அதிகரித்து ரூ. 5,103 க்கும், ஒரு சவரன் 224 ரூபாய் உயர்ந்து 40,824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 15 வருடங்களுக்கு முன்னர் ஒரு சவரன் 5 ஆயிரம் ரூபாயாக இருந்த தங்கம் தற்போது இரு கிராம் 5 ஆயிரம் ரூபாயாக மாறியுள்ளது மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here