TNTET- இல் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு…, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
TNTET- இல் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு..., ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வெளியான முக்கிய அறிவிப்பு!!
TNTET- இல் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு..., ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வெளியான முக்கிய அறிவிப்பு!!

சென்னை உயர்நீதி மன்றமானது, கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு நேரடியாக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் பெற்றவர்களுக்கு, TNTET தேர்வில் தேர்ச்சி அவசியமில்லை என அதிரடியான உத்தரவை அறிவித்திருந்தது. மேலும், அத்தகைய குறிப்பிட்ட ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் பணியை தொடரலாமே தவிர, பணி உயர்வு பெற வேண்டுமானால் TNTET தேர்ச்சி என்பது அவசியம் எனவும் குறிப்பிட்டு இருந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதற்கிடையில், தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த மே 8 முதல் 31ஆம் தேதி வரை பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு மட்டும் கடந்த மே 15-ல் தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற்றது. இதன் மூலம், நடுநிலை, தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிகளுக்கு 3,312 தலைமை ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்றுள்ளனர்.

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து…, இரங்கல் தெரிவித்த விராட் கோலி!!

இந்த பணி மாறுதலால், மேலும் பல ஆசிரியர் பணியிடங்கள் காலியாக மாறியது. இதன் காரணமாக தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்யுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, TNTET தேர்வில் தேர்ச்சி அடைந்தோர் பலர், போட்டித் தேர்வு நடைபெறுமா?? இல்லை போட்டி தேர்வு ரத்து செய்யப்பட்டு TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பணி என்ற நிலை வருமா?? என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here