“TNTET நியமன தேர்வு ரத்து?? முதல்வர் கொடுத்த வாக்கு.., வலுக்கும் கோரிக்கை!!

0
"TNTET நியமன தேர்வு ரத்து?? முதல்வர் கொடுத்த வாக்கு.., வலுக்கும் கோரிக்கை!!

ஆசிரியர் பணிக்கான நியமன தேர்வை ரத்து செய்ய கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

நியமன தேர்வு:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தகுதியான ஆசிரியர்களை பணி அமர்த்துவதற்கான, TNTET எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வை தமிழக அரசு கடந்த 2012ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டு வந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு முதல் TNTET தகுதி தேர்வை தொடர்ந்து, பணி நியமனத்திற்காக நியமன தேர்வு எழுத வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதையடுத்து, TNTET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர், பணி நியமனத்திற்காக நியமன தேர்வை எழுதி வந்தனர். இதற்கு தேர்வர்கள் நியமன தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் விடுத்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் தான், திமுக கட்சி, கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் வாக்குறுதியாக, ‘TNTET தேர்வில் பணி நியமன தேர்வை ரத்து செய்யப்படும்’ என கூறியிருந்தது.

முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1,000 ஆக உயர்வு., ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட மாநில முதல்வர்!!!

ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் செய்யப்படவில்லை. இந்நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை, பணி நியமன தேர்வை ரத்து செய்து, TNTET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here